இன்று போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடை எண் 1ல், சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை வந்தடைந்த ஷிவமொக்கா விரைவு ரெயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து கொண்டார். இதை பார்த்த ரெயில்வே போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
அந்த சோதனையின் போது, பையிலிருந்து ரூ. 40 இலட்சம் ஹவாலா பணம் மற்றும் சேதமடைந்த வைர நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த நகை மற்றும் பணத்திற்கான ஆவணம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த நகை மற்றும் பணத்திற்கான ஆவணம் எதுவும் இல்லை என்பதால் ரெயில்வே போலீசார் அவற்றையெல்லாத்தையும் பறிமுதல் செய்து அந்த பயணியையும் ஆர்.பி.எப். காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.