தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்

நாமக்கல்: தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது என நாமக்கல்லில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 1000 பஸ்கள் வாங்க, ₹420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் நடைமுறையில் உள்ளது. பிற மாநிலங்களில் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும் கூட, தமிழகத்தில் உயர்த்தக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அதே சமயம், நஷ்டத்தில் இருந்து போக்குவரத்துக் கழகங்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. தமிழகத்தில் டீசல் பஸ்களுக்கு பதிலாக, மின்சார பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது, என்றார். அருகில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடனிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.