ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து சிறுமியுடனான பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீதர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். இதில் சிறுமி நடந்ததை கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.