
தனுஷ் படத்தில் சஞ்சய் தத்?
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதுதவிர தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் மீண்டும் தெலுங்கில் நடிக்க இருக்கிறார் தனுஷ். சமீபத்தில் ஐதராபாத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது .
மிகப்பெரிய பட்ஜெட்டில் பல மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தில் பிரபலமான நடிகர்களை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஒரு சிறிய கதாபாத்திரத்திற்கு சஞ்சய் தத் 10 கோடி ருபாய் சம்பளம் கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் சம்மதிப்பாரா இப்படத்தில் இவர் நடிப்பாரா என்ற தகவல் விரைவில் வெளியாகலாம் .