அதிபயங்கர மாண்டஸ் புயல்… என்ன நடக்க போகிறது?தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை


சென்னை மற்றும் வங்க கடலை ஒட்டியுள்ள வட கிழக்கு மாவட்டங்களை மாண்டஸ் புயல் அதிபயங்கரமாக தாக்கவுள்ள நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று வீசும் வேகம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாண்டஸ் புயல்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருக்கும் மாண்டஸ் புயலானது, தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த தாழ்வு மண்டல புயலாக மாறியுள்ளது.

அதிதீவிர புயலாக உருவெடுத்து இருக்கும் இந்த மாண்டஸ் புயல் தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது, மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க இருக்கும் நிலையில் தமிழ்நாட்டை நோக்கி சுமார் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு சென்னை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் புயல் கரையை கடக்கும் இடம் கடைசி நேரத்தில் மாற வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகனமழை

மாண்டஸ் புயல் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், வடக்கு தமிழ்நாட்டில் மழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க போகிறது “இது வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு அப்டேட்” என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை தகவல் வெளியிட்டுள்ளார்.

புயல் கரையை கடக்கும் போது சுமார் 70 to 80 km/hr வேகத்தில் நீடித்த காற்று, 110 கி.மீ வேகத்தில் வீசும், சென்னையில் காற்று வீச்சு வேகம் 100 கி.மீ தொட்டும், என தெரிவித்துள்ளார். 

அதிபயங்கர மாண்டஸ் புயல்… என்ன நடக்க போகிறது?தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை | Tamil Nadu Weatherman Warning On Mandous CycloneAFP

சென்னையில் இது போன்று 1966,1994 மற்றும் 2016 ஆகிய மூன்று முறை மட்டுமே 100 கி.மீ வேகத்தை தாண்டி காற்று வீச்சு இருந்துள்ளது.

அதனால் இந்த முறை மிக கவனமாக இருக்க வேண்டும், மாண்டஸ் புயல் காரணமாக கடல் மிகவும் ஆக்ரோஷமாக இருக்க போகிறது. எனவே யாரும் சனிக்கிழமை பிற்பகல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.