
மாண்டஸ் புயல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் மற்றும் கனமழை காரணமாக தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டார்ச் அல்லது மெழுகுவர்த்திகள், பேட்டரிகள், குழந்தைகளுக்கான அத்தியாவசிய தேவைகள் மற்றும் உணவு பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பெரியோர்களுக்கு மருந்து உள்ளிட்டவை வாங்கி வைத்திருக்க வேண்டும். மேலும் உலர் பழங்கள் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசும் என்பதால் அப்போழுது மின் தடை ஏற்படும் . டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.
மின்சாரம் இருக்கும்போதே செல்போன்கள் மற்றும் பவர் பேங்க் உள்ளிட்டவையை சார்ஜ் செய்து வைத்து கொள்ளவும். ஏனென்றால் ஏதேனும் அபாயம் ஏற்படும் சமயத்தில் அரசு அறிவித்துள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து உதவியை தேடி கொள்ளலாம்.
மேலும் அவசர உதவி மற்றும் இடர் ஏற்பட்டால், காவல்துறை அவசர உதவி எண் 100 அல்லது 112, தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அவசர உதவி எண் 101 அல்லது 112 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம்.
newstm.in