வானிலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்


நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை இன்றிலிருந்து படிப்படியாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மாண்டஸ் சூறாவளி காரணமாக கடந்த இரு தினங்களாக நிலவும் குளிரான வானிலை இன்றிலிருந்து குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள மாண்டஸ் சூறாவளியின் தாக்கத்தினால் பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வீசிய கடும் காற்றினால் சுமார் 4,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இம் மாவட்டங்களில் 1,305 குடும்பங்களைச் சேர்ந்த 4,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிவப்பு எச்சரிக்கை

வானிலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Storm Warning Cage Number 5 In Cuddalore

இதேவேளை, வடக்கு, வட- மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் , அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.