FIFA உலகக்கோப்பையில்
வானவில் உடை அணிந்ததற்காக கத்தாரில் குறுகிய காலம் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஊடகவியலாளர் திடீரென சர்ச்சைக்குரிய வகையில் மரணமடைந்துள்ளார்.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக வானவில் சட்டை அணிந்ததற்காக கத்தாரில் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த விளையாட்டுப் பத்திரிக்கையாளர் கிராண்ட் வால் (49), உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான FIFA உலகக் கோப்பை காலிறுதி போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
போட்டியின் கூடுதல் நேரத்தில் ஸ்டேடியத்தில் பத்திரிகை பெட்டியில் அமர்ந்திருந்த வால் திடீரென சுயநினைவை இழந்ததாக்க கூறப்படுகிறது.
Instagram
உடனடியாக அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கிராண்ட் வாலின் சகோதரர் எரிக் வால், அவரது மரணத்தில் கத்தார் அரசுக்கு தொடர்பு இருக்கலாம் என்று குற்றம் சாட்டினார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பேசிய எரிக் வால், “என் பெயர் எரிக் வால். நான் சியாட்டில், வாஷிங்டனில் வசிக்கிறேன், நான் கிராண்ட் வாலின் சகோதரர்.
The reel from Eric Wahl: https://t.co/9oB8ScywYi pic.twitter.com/kBIWkGgDLg
— Andrew Bates (@teambates) December 10, 2022
நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர், அவர் உலகக் கோப்பைக்கு வானவில் சட்டை அணிந்ததற்கு நான் தான் காரணம். என் சகோதரர் ஆரோக்கியமாக இருக்கிறார். அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாக என்னிடம் கூறினார். என் சகோதரர் இறந்துவிட்டார் என்று நான் நம்பவில்லை, அவர் கொல்லப்பட்டார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறிய அவர் தனக்கு நியாயம் கிடைக்க உதவுமாறு கெஞ்சிக்கேட்டுக்கொள்வதாக கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க ஊடகவியலாளரின் சர்ச்சைக்குரிய திடீர் மரணமும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.