நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் சந்தித்தார்.
சந்திப்பில் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். ரசிகர் மன்ற உறுப்பினர்களிடம் பேசிய விஜய், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
நவம்பர் மாதம் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற உறுப்பினர்களை விஜய் சந்தித்தார். இந்த தொடர் சந்திப்புகள் தற்போது விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்கு வித்திட்டுள்ளது.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இப்படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் மோதுகிறது.
நிர்வாகிகளை சந்தித்த விஜய் அனைவரிடமும் தனித்தனியாக பேசியதாக தெரிகிறது. அதே போல் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
அதாவது முதலில் குடும்பம் தான் முக்கியம். குடும்பத்தை முதலில் கவனிக்க வேண்டும், மற்றவை எல்லாம் பிறகுதான் என்று கூறியுள்ளார்.
newstm.in