
ஊழல் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதால் ஐரோப்பிய நாடாளுமன்ற துணைத்தலைவர் ஈவா கைலியின் (Eva Kaili) அனைத்து சொத்துகளையும் கிரேக்க அதிகாரிகள் முடக்கினர்.

இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தர உறுப்பினர்களாக பிரிட்டன் வரவேற்கும் என்று அந்த நாட்டின் வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் காபூலின் பிரபலமான ஷார்-இ-நாவ் பகுதியில் ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

கோவிட் தொற்றுக்காலங்களில் பயன்படுத்தப்பட்ட மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் செயலியைச் செயலிழக்கச் செய்யப்போவதாகச் சீனா அறிவித்திருக்கிறது.

ரஷ்யாவுக்காகப் போராடி உக்ரைனில் கொல்லப்பட்ட லெமேகானி நீரெண்டா என்ற ஜாம்பியா நாட்டு மாணவரின் உடல் அவரின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

நிலவை நோக்கி முதன்முறையாக ஜப்பான் தொழில்முறை விண்கலத்தை அனுப்பியிருக்கிறது. தனியார் நிறுவனம் ஒன்றால் மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி இதுவெனக் கூறப்படுகிறது.

முதல் முயற்சியில் பல போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டதையடுத்து தற்போது, ட்விட்டருக்கான சந்தா சேவையை மீண்டும் தொடங்கியிருக்கிறார் எலான் மஸ்க்.

பிரபல டிக்டாக், இன்ஸ்டா ஸ்டார் அலி ட்யூலின், அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் பலியானார்

வட கொரியாவுக்கு ஸ்டராபெரி பால் மற்றும் காஃபி விற்ற சிங்கப்பூர் நபர் சிறையில் அடைக்கப்பட்டார்.