சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பெய்ஜிங்கில் உள்ள சிகிச்சை மையங்களில், நோயாளிகள் காத்துக்கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் போராட்டத்தின் காரணமாக, கொரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு தளர்த்தியதில் இருந்து, அந்நாட்டில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கிழக்கு பெய்ஜிங்கில் உள்ள சிகிச்சை மையங்களில் நோயாளிகள் வருகை அதிகரித்ததால், படுக்கைகள் நிரம்பியுள்ளன. கிட்டத்தட்ட 40 நோயாளிகள் சிகிச்சைக்காக காத்துக் கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.