தமிழகத்தில் உருவாகிறது புதிய ஒடிடி..!!

அரசு கேபிள் டிவி நிறுவனம் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தைக் பாதுகாக்கவும், குறைந்த கட்டணத்தில் சிறந்த கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டும் 2007-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 2011-ஆம் ஆண்டு “தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்களுக்கு இலவச தரநிலை வரையறை (SD) செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 2017-ஆம் ஆண்டு டிஜிட்டல் சேவையையும், 2018-ஆம் ஆண்டு HD சேவையையும் தொடங்கியது. இந்த டிஜிட்டல் SD/ HD செட்டாப் பாக்ஸ்கள் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்நிறுவனம் 136 கட்டணமில்லா சேனல்கள், 82 கட்டண சேனல்கள் என மொத்தம் 218 சேனல்களை ரூ.140 + GST என்ற கட்டணத்தில் டிஜிட்டல் முறையில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்நிறுவனத்தின் எதிர்கால செயல்திட்டம் குறித்து கேட்டறிந்து, வணிக திட்டங்களை விரைந்து செயல்படுத்திட அறிவுறுத்தினார்.

மேலும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை வழங்குவது குறித்தும், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களான VOD, OTT, IPTV வழங்கக் கூடிய HD செட்டாப் பாக்ஸ்களை அடுத்த 6 மாத காலங்களில் வழங்குவது மற்றும் TACTV OTT APP உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மேலும் அதிக சந்தாதாரர்களைச் சேர்த்து, ஒரு முன்னோடி வர்த்தக நிறுவனமாக செயல்படவும் ஆலோசனை வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.