வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சாட்டோகிராம்: வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தோல்வியுற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்று பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருக்கிறது. சாட்டோகிராமில் இன்று (டிச.,14) துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விலகினார். இதனையடுத்து லோகேஷ் ராகுல் கேப்டனாக பொறுப்பேற்றார்.
இதில், ‛டாஸ்’ வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி விபரம்: சுப்மன் கில், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், அக்சர் படேல், அஸ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement