வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாட்டு மக்களிடம் குறைத்து 2025க்குள் புகைப்பிடிக்காத நாடாக மாற்ற சிகரெட் வாங்குவதற்கும், புகைப்பதற்கும் வாழ்நாள் தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு.
2025ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அந்நாட்டு அரசு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும், புகைப்பதற்கும் வாழ்நாள்தடை விதிக்கும் புதிய சட்டத்தை அந்த நாட்டு அரசு நிறைவேற்றியுள்ளது.

அதன்படி, 2009ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு பிறந்த யாருக்கும் புகையிலையை விற்கக்கூடாது என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதாவது தற்போது சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 13 ஆக இருக்கும் நிலையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு 63 வயதாக இருக்கும். அப்படியாக படிப்படியாக புகை பழக்கம் இல்லாத நாடாக மாறும். ஆனால், 2025ம் ஆண்டுகள் புகை இல்லாத நாடாக மாற்ற அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement