வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: மதுவிலக்கு அமலில் உள்ள பீஹார் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்தனர்.
பீஹார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், மதுவிலக்கின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது. சாப்ரா மாவட்டத்தில் இஷாவ்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சிலர் நேற்றிரவு (டிச.,13) கூட்டாக மது அருந்தியுள்ளனர். அளவுக்கு அதிகமான மது போதையில் வீடு திரும்பியவர்களுக்கு திடீரென உடல்நிலை மோசமானது. இதில், 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

உடல்நிலை மோசமான நிலையில் மீதமுள்ளவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையில் இருந்த மேலும் இருவர் இன்று உயிரிழந்தனர். மேலும் 15 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் பலர் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ‛விஷ சாராயம் குடித்ததால் இவர்கள் உயிரிழந்ததாக’ போலீசார் தெரிவித்துள்ளனர். மது விலக்கு அமலில் உள்ள பீஹாரில் விஷ சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement