அவர் பேரழிவானவர், மோசமான நடுவர்! உலகக்கோப்பை தோல்வி குறித்து குரோஷிய கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு


அர்ஜென்டினாவுடனான போட்டியில் பெனால்டி தவறாக வழங்கப்பட்டதாக நடுவர் மீது குரோஷிய கேப்டன் லூகா மோட்ரிச் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


பெனால்டி குற்றச்சாட்டு

லுஸைல் மைதானத்தில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தியது.

அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட பெனால்டி தவறானது என குரோஷியா கேப்டன் மோட்ரிச் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மோட்ரிச் கூறுகையில், ‘பெனால்டி கொடுக்கப்படும் வரை நாங்கள் நன்றாக விளையாடினோம், அது வழங்கப்பட்டிருக்கக் கூடாது’
என தெரிவித்தார்.

அவர் பேரழிவானவர், மோசமான நடுவர்! உலகக்கோப்பை தோல்வி குறித்து குரோஷிய கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு | Croatia Captain Angry On Referee Argentina Match

@Getty Images

மோசமான நடுவர்

மேலும் பேசிய அவர், ‘நான் பொதுவாக நடுவர்களைப் பற்றி பேசுவதில்லை. ஆனால், இன்று அவ்வாறு செய்யாமல் இருப்பது சாத்தியமில்லை.

அவர் எனக்குத் தெரிந்த மோசமானவர்களில் ஒருவர் (டேனியல் ஓர்சாடோ), நான் இன்று (நேற்று) நடந்தது பற்றி மட்டும் பேசவில்லை.

டேனியல் ஓர்சாடோ/Daniel Orsato

@Stuart Franklin/Getty Images

ஏனென்றால் முன்பே அவரை எனக்கு தெரியும். அவர் குறித்த நல்ல நினைவு ஒருபோதும் இல்லை.

அவர் ஒரு பேரழிவானர். அப்படியிருந்தும், அர்ஜென்டினாவை வாழ்த்த விரும்புகிறேன்.

அவர்களிடம் இருந்து பாராட்டுகளை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதியானவர்கள். ஆனால் அந்த முதல் பெனால்டி எங்களை அழித்துவிட்டது’ என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

லூகா மோட்ரிச்/Luka Modric

@REUTERS

குரோஷிய பயிற்சியாளர்

அதேபோல், குரோஷிய அணியின் பயிற்சியாளர் டாலிக்கும் பெனால்டி குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

அவர், மெஸ்சிக்கு பெனால்டி கொடுக்கப்பட்டது புதிய விதியா என கேள்வி எழுப்பினார். அப்படி புதிய விதிகள் என்றால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என கடுமையாக சாடியுள்ளார்.      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.