வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்பூர்: ராகுலின் 98வது நாள் யாத்திரையான, இன்று(டிச.,14) ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார்.
காங்., எம்.பி. ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3570 கிலோ மீட்டர் தூரத்துக்கான 150 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரையை துவக்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ரா, மத்திய பிரதேசத்தில் நடைபயணத்தை முடித்த பிறகு, கடந்த 3ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திற்கு நுழைந்தார்.
இந்நிலையில், இன்று(டிச.,14) ராஜஸ்தானின் நடந்த வரும் யாத்திரையில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். ராகுலின் நடைப்பயணம் மொத்தம் 150 நாள்கள் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 100 நாள்களை கடந்து சாதனை படைக்கவுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement