காசி விஸ்வநாதர் கோயிலில் நாளை(டிச 15) இளையராஜா கச்சேரி

இந்துக்களின் புனித ஸ்தலமான வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதிலிமிருந்தும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். பாரதியார் வாழ்ந்த காசி வீட்டை அவருக்கு சிலையும் திறந்துள்ளது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக இளையராஜாவின் இசை கச்சேரி கடந்த மாதம் 19ம் தேதி நடந்த துவக்க விழாவின் போது நடந்தது. இந்த நிலையில் மீண்டும் இளையராஜா நாளை (15ம் தேதி) காசி விஸ்வநாதர் ஆலயத்தின் உள்ளே இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை சார்பில் அதன் முதன்மை நிர்வாக அதிகாரி சுனில் குமார் வர்மா விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

காசி விஸ்வநாதர் கோயிலில் முதல் தமிழனாக இளையராஜா பாட உள்ளார். மாலை 6 மணிக்கு தொடங்கும் கச்சேரியில் 16 பாடல்களை இளையராஜா பாடுகிறார். அங்குள்ள சிவன் முன்பு மாணிக்கவாசகரின் திருவாசகத்தை இளையராஜா முதன் முறையாகப் பாட உள்ளார். திருவாசகத்திலிருந்து 4 பாடல்கள் இடம்பெற உள்ளன.

கோயிலுக்குள் சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ள பிரமாண்ட மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. உலகம் முழுக்க இருந்து வந்திருக்கும் இசை மற்றும் ஆன்மிக ஆர்வலர்கள் இளையராஜாவின் பக்தி இசை மழையில் நனைய இருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.