‘திருமணத்திற்கு வாங்க, அடுத்த மாப்பிள்ளை நாங்க, பொண்ணு இருந்தா தாங்க’: நண்பர்கள் வைத்த பேனர்

காஞ்சிபுரத்தை அடுத்த தூசி பகுதியை சேர்ந்தவர் பூபதி ராஜா.பட்டதாரி இளைஞரான இவர் காஞ்சிபுரத்திலுள்ள ஓர் தனியார் பட்டு ஜவுளி கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தனது சொந்த ஊரிலிருந்து காஞ்சிபுரம் வந்து செல்லும் இவர் கடந்த 2வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தை சேர்ந்த ரேணுகா என்பவருடன் நட்புறவு ஏற்பட்டு பின்னர்  இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.இந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமானது காஞ்சிபுரத்தை அடுத்த தூசி பகுதியிலுள்ள ஓர்‌ தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதற்கென மாப்பிள்ளை பூபதி ராஜாவின் நண்பர்கள் திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைத்துள்ளனர்.

அந்த பேனரில் வாலிபர் கைது என்று கொட்டை எழுத்தில் வைக்கப்பட்ட அதில் குற்றம் – பெண்ணின் மனதை திருடிவிட்டார் என்றும் அதற்கான தீர்பாக மூன்று முடிச்சு போடுதல் என்றும் கைது செய்யும் நாள்,கைது செய்யும் நாள் எனவும் குறிப்பிடப்பட்டு அதற்கான சாட்சிகள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என வித்தியசமாக வைத்த இருந்தது.மேலும் அதில் திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக திருமண வாங்க, அடுத்த மாப்பிள்ளை நாங்க, பொண்ணு இருந்த தாங்க எனும் எழுத்துகளும் அச்சிடப்பட்டு டிவிஸ்ட் வைத்தும் பேனரில் இடபெற்றிருந்தது.

திருமணத்திற்கு வருகைதந்தவர்கள் வித்தியாசமாகவும், சிரிப்பூட்டும் வகையில் இருந்த இந்த பேனரை உற்று பார்த்தோடு சிலர் சிரித்து சென்ற நிலையில் பெண் பிள்ளை உள்ளவர்கள் வாயடைத்து போய் முனுமுனுத்தவாரும் சென்றனர். தற்போது இந்த திருமண வரவேற்பு பேனர் புகைப்படங்கள் சமூக வளைதளங்கல் வைரலாகி வருகிறது. திருமணத்திற்காக பெண்ணின் மனதை திருடிய வாலிபர் கைது என வித்தியாசமாக பேனர் வைத்த அனைவரையும் கவர்ந்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.