ஆரவாரம் இல்லாத சேலம் திமுக… உதயநிதி விஷயத்தில் செம சைலண்ட்… என்ன காரணம்?

தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக திமுக இளைஞரணி செயலாளராக

அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடினர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் எந்தவித ஆரவாரமும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

திமுக உ.பி.,க்கள் அதிர்ச்சி

இது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி சேலம் திமுக உடன்பிறப்புகளிடம் விசாரிக்கையில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் அமைச்சர்கள் யாரும் இல்லை. இந்த மூன்று மாவட்டங்களிலும் அரசின் திட்டங்கள் முழுமையாக சென்று சேருவதற்கு வழி இல்லாமல் இருக்கிறது. மேலும் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதிலும், உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்துவதிலும் முனைப்பு காட்டப்படுவதில்லை.

பொறுப்பு அமைச்சர்கள் மட்டுமே

அந்தந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் மட்டும் அவ்வப்போது வந்து அரசு விழாக்களில் தலையை காட்டி விட்டு செல்கின்றனர். இதனால் சேலம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் பெரிய அளவிலான திட்டங்கள் திமுக ஆட்சியில் வரவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. பொதுமக்களும் இதைத்தான் பெரிதாக எதிர்பார்ப்பாக குறிப்பிட்டனர்.

சேலத்திற்கு அமைச்சர் கிடையாது

சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே திமுக. இந்த சூழலில் நிர்வாக வசதிக்காக திமுக சார்பில் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அரசின் திட்டங்களுக்கு உறுதுணையாக நிற்க முடிகிறதே தவிர, எந்த ஒரு கொள்கை முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக தெரிகிறது.

ஏமாற்றத்தில் உடன்பிறப்புகள்

2021 சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் அமைச்சர்களுக்கு கூடுதல் இலாக்காக்கள் வழங்கியதும், அமைச்சரவை விரிவாக்கம் செய்ததும் சேலம் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாம்.

ஆரவாரமில்லாத கொங்கு மண்டலம்

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பெரிய அளவில் திமுக வெற்றி பெறவில்லை. அதற்காக மக்கள் நலத்திட்டங்களில் இப்படி செய்யலாமா? என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். சிறிய சிறிய இலக்காக்களை அமைச்சர்கள் இல்லாத மாவட்டத்திற்கு பிரித்துக் கொடுத்து மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் என உருவாக்க வேண்டும்.

அப்படி செய்தால் அந்தந்த மாவட்டங்களுக்கு அரசு திட்டங்கள் முறையாக வந்து சேரும். புதிய திட்டங்களையும் கொண்டு வர முடியும். வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தலைமை அனைத்து மாவட்டங்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று சேலம் உடன்பிறப்புகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.