ஹைதராபாத்: சாதாரணமாக கோயில்கள் முன்பு பைக்குகள், கார், ஜீப், பஸ் மற்றும் லாரிகளுக்கு பூஜைகள் செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், தெலங்கானாவில் மலை கோயிலான யாதாத்ரி லட்சுமி நரசிம்மர் கோயில் முன்பு நேற்று புதிய ஹெலிகாப்டருக்கு பூஜை நடத்தப்பட்டு, பூசணிக்காய், தேங்காய் உடைத்து, எலுமிச்சை பழம் சுற்றிப் போட்டு பூஜை நடத்தப்பட்டது.
இந்த ஹெலிகாப்டர் பிரதீமா மருத்துவக் கல்லூரி எம்.டி.யும், பிரதீமா குழும தலைவருமான போயபல்லி ஸ்ரீநிவாசுலுவுக்கு சொந்தமானது ஆகும். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.