வயிற்று வலி என நினைத்த பெண்ணுக்கு நடுவானில் திடீரென பிறந்த குழந்தை! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்


நெதர்லாந்துக்கு பயணம் மேற்கொண்ட பெண்ணுக்கு விமானத்தில் குழந்தை பிறந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான வயிற்று வலி

தமரா என்ற பெண் ஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமிற்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.

அந்த விமானம் தரையிறங்குவதற்கு ஒரு மணிநேரம் முன் தமராவுக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரது அருகில் அமர்ந்திருந்த பெண்மணி தமராவை கழிவறைக்கு அழைத்துச் சென்றார்.

கடுமையான வயிற்று வலியால் தமரா அலறித் துடித்ததால், அவுஸ்திரியாவைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியர் ஆகியோரும் அங்கு சென்றனர்.

வயிற்று வலி என நினைத்த பெண்ணுக்கு நடுவானில் திடீரென பிறந்த குழந்தை! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள் | Woman Blessed Girl Baby In Flight

@Representative Pic

அப்போது திடீரென தமராவுக்கு குழந்தை பிறந்துவிட்டது. இதனைக் கண்டு மருத்துவர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

குழப்பத்தில் தமரா

ஏனென்றால் கர்ப்பமாக இருக்கும் சுவடே தெரியாமல் தமரா இருந்துள்ளார். மேலும், கர்ப்பமாக இருந்தது தனக்கே தெரியாது எனவும் அவர் அதிர்ச்சி கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து விமானம் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அங்கு தயார் நிலையில் இருந்து மருத்துவ குழு தமாரா மற்றும் பெண் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

வயிற்று வலி என நினைத்த பெண்ணுக்கு நடுவானில் திடீரென பிறந்த குழந்தை! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள் | Woman Blessed Girl Baby In Flight

தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமரா இந்த குழப்பத்தில் இருந்து மீளவில்லை என்று கூறப்படுகிறது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.