அயோத்தி,ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த நான்கு பெண் போலீசார், சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் பரவியது. இதையடுத்து நான்கு பேரும் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இங்கு, பாதுகாப்பு பணிக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு பணியில் இருந்த பெண் போலீசார், கவிதா படேல், காமினி குஷ்வாஹா, கஷிஷ் சாஹ்னி, சந்தியா சிங் ஆகிய நான்கு பேரும், ஓய்வு நேரத்தில் போஜ்புரி சினிமா பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளனர்.
ஆனால், அப்போது அவர்கள் சீருடை அணிந்திருக்கவில்லை. நான்கு பேரும் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
இதையடுத்து, நான்கு பேரையும் ‘சஸ்பெண்ட்’ செய்த அயோத்தி மாவட்ட எஸ்.பி., முனிராஜ், துறை ரீதியான விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement