பிரான்சில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ: சிறுவர்கள் உட்பட 10 பேர் பலியான பரிதாபம்


கிழக்கு பிரான்சில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றி பற்றிய தீக்கு சிறுவர்கள் உட்பட 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

கிழக்கு பிரான்சிலுள்ள Lyon நகருக்கு அருகில் அமைந்துள்ள ஏழு மாடிக் குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் தீப்பற்றியுள்ளது.

இந்த கோர விபத்தில் ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.

எதனால் தீப்பற்றியது என தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் மேலும் 14பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்களில் ஒருவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ: சிறுவர்கள் உட்பட 10 பேர் பலியான பரிதாபம் | 10 Killed In Fire Near Lyon In Eastern France

Representative Image

தீயணைப்பு படையினரும் காயம்

சுமார் 170 தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்தில் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களில் இரண்டு பேரும் காயமடைந்துள்ளார்கள். இந்த கோர விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.