
டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அரசு செலவில் விளம்பரம் செய்ததாக அம்மாநில ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் அண்மையில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது அரசு சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் அரசியல் விளம்பரங்களாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டெல்லி தலைமைச் செயலாளருக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உருவாக்கப்பட்ட குழு பரிந்துரைத்த அரசு விளம்பரங்களுக்கான விதிகளை, ஆம் ஆத்மி கட்சி மீறியிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த நடவடிக்கையை ஆளுநர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள துணை நிலை ஆளுநர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் மீண்டும் டெல்லியில் ஆளுநர் – ஆட்சியாளர் இடையிலான மோதல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
newstm.in