வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களை மட்டும் வழி நடத்தப் போவதாக கூறியுள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், தலைமை பொறுப்பை வகித்து வந்தார். அந்த நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்திய அவர், தலைமை பொறுப்பை தொடர்ந்து வகிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தன்னை பின்பற்றும் 12.2 கோடி பேரிடம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். வாக்கெடுப்பின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் அவர் உறுதி கூறியிருந்தார். வாக்கெடுப்பு முடிந்த நிலையில் அவர் பொறுப்பில் இருந்து விலகலாம் என 57.5 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

இந்நிலையில், தலைமை பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ள எலான் மஸ்க், மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களை மட்டும் வழிநடத்த போவதாகவும், அதில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement