அதிமுகவின் முன்னாள் எம்பியும், திமுகவின் இந்நாள் சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளருமான டாக்டர் மஸ்தான் தஸ்கீர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 66.
கடந்த 1995-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தெர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் மஸ்தான். இவர், 2001 வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். இதனையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். அவருக்கு சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று காலை, செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது டாக்டர். மஸ்தானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது மறைவிற்கு திமுகவினர் மற்றும் அதிமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.