செக்ஸ் உறவுக்கான வயதை குறைக்க திட்டமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில், “ஒருமித்து ஒரு ஆணும், பெண்ணும் சம்மதித்து (செக்ஸ்) உறவு கொள்வதற்கான வயது 18யில் இருந்து 16 ஆக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா?” என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் இல்லை என அவர் தெளிவுபடுத்தி உள்ளார். கருத்தொருமித்து ஒரு ஆணும், பெண்ணும் சம்மதித்து (செக்ஸ்) உறவு கொள்வதற்கான வயது 18 என்பதை 16 ஆக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா? என்ற கேள்விக்கே இடம் இல்லை என்றார்.
போக்சோ சட்டம், 2012, குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காகத்தான் இயற்றப்பட்டது. இந்த சட்டம், 18 வயதுக்கு கீழே உள்ள எந்த நபரையும் குழந்தை என்றுதான் வரையறை செய்துள்ளது என்று கூறினார்.
குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களை செய்வோருக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கவும், குழந்தைகள் மீதான இத்தகைய குற்றங்களைத் தடுக்கவும் 2019-ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் குழந்தையால் குற்றம் செய்யப்பட்டால் போக்சோ சட்டத்தின் பிரிவு 34, குழந்தையால் குற்றம் செய்யப்படுவது மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் வயதை நிர்ணயம் செய்வதற்கான நடைமுறையை வழங்குகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.
newstm.in