
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் மனைவி ரஞ்சனி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் திவாகர். தடபெரும்பாக்கத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த இவர், திமுகவின் பொன்னோரி பகுதியின் இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில், திவாகருக்கும் முனிரத்தினா என்ற 22 வயது இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதுமட்டுமின்றி, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், முனிரத்தினாவின் செல்போனில் இருந்த வீடியோவை, அவருடைய முன்னாள் காதலன் பார்த்துள்ளார். அத்துடன், இந்த வீடியோவை வைத்து திவாகரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு அவர் மிரட்டியுள்ளார். ஆனால், திவாகர் பணம் தர முடியாது என்று கூறியதால், அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து திவாகரை சந்தித்த முனிரத்தினாவின் தாய், ‘வீடியோ ஊர் முழுவதும் பரவி விட்டது; எனவே, என் மகளை நீ தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த திவாகர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முனிரத்தினாவின் முன்னாள் காதலன், முனிரத்தினா, அவரது தாய் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த மூவரும் தலைமறைவாகினர். அவர்களை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.