வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்., கட்சி மக்களுடன் தொடர்பற்றது ஆகிவிட்டது. அவர்கள் நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரை தனது இருப்பை உறுதி செய்ய மட்டுமே நடக்கிறது என மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர தோமர் கூறினார்.

இது தொடர்பாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர தோமர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காங்., யை கண்டு பாஜ., வுக்கு பயம் ஏற்படுவதற்கான அவசியமில்லை. காரணம் காங்., இப்போதைய அரசியல் சூழலுக்கு பொருத்தமற்றதாகிவிட்டது.
காங்., கட்சி மக்களுடன் தொடர்பற்றது ஆகிவிட்டது. அவர்கள் நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரை தனது இருப்பை உறுதி செய்ய மட்டுமே நடக்கிறது. இந்தியா ஒற்றுமையாகத்தான் இருக்கிறது. உடைந்து போய்விடவில்லை.

எல்லா பக்கங்களில் இருந்தும் இந்தியா இணைந்தே இருக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வளர்கிறது என்ற உண்மையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement