அதை என்னிடம் கொடுங்கள்! உங்களுக்கு பல கோடி பணம் தருகிறேன்… மெஸ்ஸியை தேடி வந்த வாய்ப்பு


லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பையை கையில் எந்தியபோது அணிந்திருந்த அரபிக் Bisht உடைக்காக அவருக்கு $1 மில்லியன் பணம் வழங்க நபர் ஒருவர் முன் வந்துள்ளார்.

மெஸ்ஸியின் அர்ஜென்டினா

கத்தார் உலகக் கோப்பை சமீபத்தில் முடிந்த நிலையில் சாம்பியன் கோப்பையை மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.
வெற்றியை தொடர்ந்து மெஸ்ஸி கோப்பையை தலைமீது தூக்கி வைத்து கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அந்த சமயத்தில் அரபிக் Bisht கருப்பு உடையை மெஸ்ஸி தன் உடல் மீது அணிந்திருந்தார்.
கட்டார் மன்னர் தமீன் பின் ஹமீத், கோப்பையை வெல்லும் முன், மெஸ்ஸியை அந்த அங்கியை அணிய வைத்தார்.

அதை என்னிடம் கொடுங்கள்! உங்களுக்கு பல கோடி பணம் தருகிறேன்... மெஸ்ஸியை தேடி வந்த வாய்ப்பு | Lionel Messi Offered 1M For Bisht Fifa Worldcup

Reuters/AP Photo/Martin Meissner

$1 மில்லியன்

Bisht அங்கி ஒட்டக முடி மற்றும் ஆடு கம்பளியால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மெஸ்ஸி அணிந்திருந்த அங்கியை தனக்கு கொடுத்தால் அவருக்கு $1 மில்லியன் என்ற பிரம்மாண்ட தொகையை கொடுக்க தயாராக இருப்பதாக வழக்கறிஞரும், ஓமன் நாடாளுமன்ற உறுப்பினருமான Ahmed Al Barwani தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அந்த உடையை சரியான காட்சிக்கு வைத்து, உலகம் பார்க்கும்படி செய்ய வேண்டும் என்பது அவரின் விருப்பமாக உள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.