அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது இளைஞர் உலகை சுற்றிப்பார்க்க ரூ.2.48 கோடி செலவு செய்து 12 ஆண்டுகளுக்கு சொகுசு கப்பலில் ஒரு ப்பார்ட்மெண்டையே லீசுக்கு எடுத்துள்ளார்.
ஆஸ்டின் வெல்ஸ் என்பவர் மெட்டா நிறுவனத்தில் ரியாலிட்டி பிரிவில் வேலைபார்த்து வருகிறார். இந்த இளைஞர் தான் எம்வி நரேட்டிவ் என்ற சொகுசு கப்பலில் 12 ஆண்டுக்கு ஒரு அப்பார்ட்மெண்டை லீசுக்கு எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலிஸ்டர் புன்டன், ஷானோன் லீ ஆகியோர் இணைந்து 2016ஆம் ஆண்டு ஸ்டோரிலைன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனம் தான் எம்வி நரேட்டிவ் என்ற பிரம்மாண்ட சொகுசு கப்பலை தயாரித்துள்ளது.

இந்த சொகுசு கப்பலில் பள்ளி, கல்லூரி, ஆன்லைன் வசதி, வங்கி, திரையரங்கம், உணவகம், நூலகம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், அழகு நிலையம் என ஒரு குட்டி நகரமே உள்ளது. அதோடு 547 வீடுகளும் இருக்கிறது.
இந்த கப்பலின் முதல் பயணம் 2025ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. 1000 நாளில் 6 கண்டங்களுக்குச் செல்ல உள்ளது. மேலும் ஒவ்வொரு துறைமுகத்திலும் மூன்று நாட்கள் இந்த கப்பல் நின்று செல்ல உள்ளது. இந்த கப்பலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

ட்டில் இருந்து பணியாற்றுவதில் சுவாரசியம் இல்லை என்பதால், சொகுசு கப்பலில் அப்பார்ட்மெண்டை லீசுக்கு எடுத்துள்ளதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். இதன் மூலம் உலகை சுற்றி வர உள்ளதாக தெரிவிதுள்ளார்.
newstm.in