Suryanagiri express derails : ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி நகரில் இன்று அதிகாலை சுர்யநகரி எக்ஸ்பிரஸ் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜோத்பூர் கோட்டத்தில் உள்ள ராஜ்கியாவாஸ்-போமத்ரா ஆகிய பிரிவுகளுக்கு இடையே நடந்துள்ளது. இந்த ரயில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் பாந்த்ரா நகரில் இருந்து புறப்பட்டு ஜோத்பூர் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
அந்த ரயில்களில் உள்ள பயணிகளை பாதுகாப்பாக அழைத்து வர, ஜோத்பூரில் இருந்து ஓர் உதவி ரயில் அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை இச்சம்பவத்தால் பெரிய அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.
8 பெட்டிகள் தடம்புரண்டதில், 11 பெட்டிகள் சேதமடைந்துள்ளன. மேலும், ரயில் பயணிகள் தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ரயில்வே துறை தனி பேருந்து ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தடம்புரண்ட ரயிலில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில்,”மார்வார் சந்திப்பில் இருந்து புறப்பட்ட 5 நிமிடங்களில், ரயிலுக்குள் அதிர்வு ஒலி கேட்டது. 2-3 நிமிடங்களுக்குப் பிறகு, ரயில் நின்றது. நாங்கள் கீழே இறங்கி பார்த்தோம், குறைந்தது 8 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் தடம் புரண்டிருந்தன. 15-20 நிமிடங்களில் ஆம்புலன்ஸ்கள் வந்து சேர்ந்தன” என்றார்.
“Within 5 minutes of departing from Marwar junction, a vibration sound was heard inside the train & after 2-3 minutes, the train stopped. We got down & saw that at least 8 sleeper class coaches were off the tracks. Within 15-20 minutes, ambulances arrived,” says a passenger pic.twitter.com/aCDjmZEFyq
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) January 2, 2023
“உயர் அதிகாரிகள் விரைவில் சம்பவ இடத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடமேற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் ஜெய்ப்பூரில் உள்ள தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறையில் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்” என்று வடமேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறினார்.
மேலும் படிக்க | புத்தாண்டு தினத்தன்று டெலிவரி பாயாக பணியாற்றிய Zomato CEO!