நேபாள புதிய பிரதமர் பிரசண்டா அரசின் மீது ஜன.10-ல் நம்பிக்கை ஓட்டெடுப்பு| Nepals new Prime Minister Prasanda will hold a vote of confidence on January 10

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காத்மாண்டு: நேபாள புதிய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பாராளுமன்றத்தி்ஜன. 10-ல் ஒட்டெடுப்பு நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம் அண்டை நாடான நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் 2022 நவம்பர் 20ல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன், நேபாளி காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் செய்தது.

latest tamil news

இதன்படி, ஐந்து ஆண்டு கால ஆட்சியில், இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருக்க முடிவு செய்யப்பட்டு பிரதமராக புஷ் கமல் பிரசண்டா கடந்த டிச.26-ல் பதவியேற்றார்.

இந்நிலையில் புதிய பிரதமர் பிரசண்டா அரசின் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஜன. 10-ல் பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.