தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்காக நிதியை ஒதுக்கீடு செய்தால் பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு நிதி இருக்காது என்று நிதி அமைச்சும், விவசாய அமைச்சும் தெரிவித்துள்ளன.
இதேவேளை, பொருளாதார நெருக்கடி நிலவும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்காக நிதியை செலவிட வேண்டாம் என விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையை உற்பத்தி செயற்பாடுகளுக்கும், விவாசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்துவது பொருத்தமாகும்.
இதன் மூலம் நாட்டில் உணவு உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகளின் பொருளாதார அபிவிருத்திக்கு இது பெரும் பின்புலமாக அமையும் என்று இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.