இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணி இம்மாதம் இலங்கை வரவுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்த அணி ,இலங்கை ஏ பிரிவு கிரிக்கெட் அணியுடன் 2 நான்கு நாள் போட்டிகளில் கலந்துக்கொள்ளும். இதேபோன்று 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் இந்த அணி கலந்துக்கொள்ளவுள்ளது.
இந்த போட்டிகளுக்கு முன்னர் இம்மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரையில் கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் 3 நாள் போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது.
காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் 4 நாள் போட்டி நடைபெறவுள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.