ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுகவின் அரசியல் கணக்கு… ஷாக் மூடில் அதிமுக!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா காலமானார். தமிழக

பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. 46 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு தந்தை பெரியாரின் கொள்ளு பேரன், ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் உயிரிழப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. நேற்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். திருமகன் ஈவேராவிற்கு இன்று இறுதி சடங்குகள் நடைபெறும் எனச் சொல்லப்படுகிறது.

திருமகன் ஈவேரா மறைவு

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை முன்வைத்து பல்வேறு விதமான அரசியல் கணக்குகள் போடத் தொடங்கிவிட்டனர். எல்லாம் இடைத்தேர்தல் விவகாரம் தான். திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையத்தில் இருந்து வெளிவந்ததும், அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஈரோடு கிழக்கு தொகுதி

இதில் யார் போட்டியிடப் போகிறார்கள்? வெற்றி வாகை சூடப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தொகுதி மறுவரையறை செய்ததன் மூலம் 2008ஆம் ஆண்டு உருவானது ஈரோடு கிழக்கு. இதையடுத்து மூன்று சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. 2011ல் தேமுதிகவின் வி.சி.சந்திரகுமார், 2016ல் அதிமுகவின் கே.எஸ்.தென்னரசு, 2021ல் காங்கிரஸின் திருமகன் ஈவேரா என மூன்று முறையும் வெவ்வேறு கட்சிகள் வெற்றி வாகை சூடின.

2021 சட்டமன்ற தேர்தல்

கடந்த தேர்தலில்

கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.யுவராஜா எதிர்த்து களமிறங்கினார். அவர் 58,396 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 67,300 வாக்குகள் உடன் காங்கிரஸின் திருமகன் ஈவேரா வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

இடைத்தேர்தலில் யார் போட்டி?

இந்த சூழலில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? இல்லை திமுக நேரடியாக களமிறங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. திருமகன் ஈவேரா மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் துயரமான ஒன்று. இதனால் அக்கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு அனுதாப ஓட்டுகள் விழுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே திமுக களமிறங்காது என்றே சொல்லப்படுகிறது.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாய்ப்பு

அப்படி நடந்தால் திருமகனின் தந்தை ஈவிகேஸ் இளங்கோவன் களமிறங்குவாரா? இல்லை புதிதாக ஒருவர் நிறுத்தப்படுவாரா? போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அப்படியே அதிமுக பக்கம் சென்றால் உட்கட்சி பூசல் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. தற்போதைய சூழலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தெரிகிறது.

அதிமுகவின் நிலை

எனவே அக்கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் கையெழுத்தும் வேண்டும். ஆனால் அதற்கு இருவரும் உடன்படுவார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒருவேளை ஒத்துவரவில்லை எனில் சின்னம் முடங்கிவிடும். எனவே தற்போதைய நெருக்கடியான சூழல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஓரங்கட்டி, திமுக கூட்டணிக்கே சாதகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.