கரூர் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் 15 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கரூர் மாவட்டம் அக்கரக்கான்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் குடும்பத்துடன் குள்ளம்பட்டி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாயத் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மகள் கோகிலா(15) எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.
மேலும் கோகிலா வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் கோகிலாவை அவரது பெற்றோர் பள்ளிக்கும் செல்லாமலும், வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்ததை கண்டித்துள்ளனர்.
இதனால் வேதனையடைந்த கோகிலா, தற்கொலை செய்து கொள்வதற்காக முருகை செடிக்கு அடிக்கும் விஷ மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சடைந்த நிலையில், உடனடியாக கோகிலாவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோகிலா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.