இளவரசர் ஹரியை தனியறையில் நையப்புடைத்த சகோதரர் வில்லியம்: காரணம் மேகன் மெர்க்கல்


மேகன் மெர்க்கல் தொடர்பான தீவிர விவாதத்தின் போது தம்மை சகோதரர் வில்லியம் தாக்கியதாகவும், கழுத்தைப் பிடித்து தரையில் தள்ளியதாகவும் இளவரசர் ஹரி தமது புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

காயப்படுத்திய வில்லியம்

பிரித்தானிய இளவரசர் ஹரி தமது வாழ்க்கை குறிப்புகளை Spare என்ற புத்தகத்தினூடாக வெளியிடவிருக்கிறார்.
இந்த புத்தகத்திலேயே தமது சகோதரர் வில்லியம் தம்மை உடல் ரீதியாக காயப்படுத்தியது தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார் ஹரி.

இளவரசர் ஹரியை தனியறையில் நையப்புடைத்த சகோதரர் வில்லியம்: காரணம் மேகன் மெர்க்கல் | William Physically Attacked Prince Harry

@getty

2019ல் லண்டனில் உள்ள மாளிகையில் இச்சம்பவம் நடந்துள்ளது. சகோதரர்கள் இருவரும் மேகன் மெர்க்கல் தொடர்பில் காரசாரமாக விவாதித்துள்ளனர்.
ஒருகட்டத்தில், கோபமடைந்த வில்லியம் மேகன் மெர்க்கலை தரக்குறைவாக பேசத் தொடங்கியுள்ளார்.

மேகன் தங்களது குடும்பத்திற்கு ஏற்றவர் அல்ல எனவும், அவர் முரட்டுத்தனமானவர் எனவும், விசித்திரமான குணம் கொண்டவர் எனவும் வில்லியம் குறை கூறியுள்ளார்.
இந்த விவாதங்களின் முடிவில் தாம் காயங்களுடன் அந்த அறையில் இருந்து வெளியேறியதாகவும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.

இளவரசர் ஹரியை தனியறையில் நையப்புடைத்த சகோதரர் வில்லியம்: காரணம் மேகன் மெர்க்கல் | William Physically Attacked Prince Harry

@netflix

வருந்திய மேகன் மெர்க்கல்

உண்மையில் ஹரியை காப்பாற்றும் முயற்சியாகவே மேகன் தொடர்பில் வில்லியம் விவாதித்ததாகவும், ஆனால் ஹரியின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அது அமைந்துவிட்டது எனவும் கூறப்படுகிறது.

ஹரியை தாக்கி காயப்படுத்திய வில்லியம் பின்னர், திருப்பி தாக்கு என ஆத்திரமூட்டியதாகவும் தமது புத்தகத்தில் ஹரி பதிவு செய்துள்ளார்.
மேலும், அந்த அறையில் இருந்து வெளியேறும் முன்னர், நடந்தவற்றை மேகனிடம் பகிர்ந்துகொள்ள தேவையில்லை என தெரிவிக்க, பதிலுக்கு ஹரி, எது? என்னை காயப்படுத்தியதையா என திருப்பி கேட்டுள்ளார்.

இளவரசர் ஹரியை தனியறையில் நையப்புடைத்த சகோதரர் வில்லியம்: காரணம் மேகன் மெர்க்கல் | William Physically Attacked Prince Harry

@getty

ஆனால், அது காயப்படுத்தியதல்ல என வில்லியம் பதிலளித்துள்ளார். இதன் பின்னர், நடந்த சம்பவத்தை மேகனிடம் பகிர்ந்துகொள்ளாமல் நேரடியாக தமக்கு சிகிச்சை அளிப்பவருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார் ஹரி.

ஆனால் காயங்களை கவனித்த மேகன் மெர்க்கல் மிகவும் வருந்தியதாகவும், அவர் கோபமடையவோ வியப்படையவோ இல்லை எனவும் ஹரி குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.