சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், சென்னை இலக்கிய திருவிழா-2023ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த இலக்கிய படைப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர், 100 நூல்களை வெளியிட்டார்.
பின்னர் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், மொழியைக் காக்க உயிரை கொடுத்த இனம் நம்முடைய தமிழினம் என்றும் கூறினார்.
எத்தனையோ திட்டங்கள் கொண்டுவந்தாலும், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரியில் வள்ளுவர் சிலையும் காலத்தால் அழியாத கம்பீரமான சின்னங்களாக இன்று வரை இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.