சென்னை: மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் 7 முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்படவும், இதனால், சாலையோர கட்டிடங்களை இடிக்கவும், மெட்ரோ பணி காரணமாக, இரண்டு முக்கிய மேம்பாலங்களையும் இடிக்க சிஎம்டிஏ திட்டமிட்டு உள்ளது. அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுடனான இணைப்பை மேம்படுத்த, மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 7 முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்பட வுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆய்வு பணிகளை சென்னை பெருநகர […]
