சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி தன்னுடைய வாழ்வை சுய சரிதையாக எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில் தன் போர் பயிற்சிகளை, 20 ஆண்டுகளாக போர் நடந்துக் கொண்டிருந்த ஆஃப்கானில் மேற்கொண்டதாக குறிப்பிட்டுக்கிறார். போர் பயிற்சியின் போது 25 தாலிபன் முஜாஹிதீன்களை கொன்றதாக குறிப்பிட்டிருந்த அவர், இது தொடர்பாக ஒரு பேட்டியில், “தாலிபன்களை வெட்டி வீசவேண்டிய சதுரங்க காய்களாக தான் அப்போது பார்த்தேன். அவர்களை மனிதர்களாக பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இளவரசர் ஹாரின் இந்த பேச்சு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனத்துக்குள்ளானது. பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தாலிபன்கள் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.

இது குறித்து தாலிபன் தலைவர் அனஸ் ஹக்கானி தன் ட்விட்டர் பக்கத்தில், ” ஹாரி குறிப்பிட்ட தேதியில் எங்கள் அமைப்பின் மீது நடத்தப்பட்ட கொலைகள் குறித்து நாங்கள் தேடிப் பார்த்தோம். அவர் கூறியது போல் அந்த நாளில் எங்கள் அமைப்பில் யாரும் இருக்கவில்லை. அப்படியென்றால், இளவரசர் ஹாரி கொலை செய்தது அப்பாவி பொதுமக்களைதான் என்று முடிவுக்கு வரலாம்.
மேற்கத்திய நாடுகள் ஆப்கானில் செய்த போர் குற்றத்தின் சிறு பகுதி இது. ஹாரி… நீங்கள் கொன்றது சதுரங்க வீரர்கள் அல்ல, அவர்கள் மனிதர்கள். அவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் குடும்பங்கள் காத்துக்கொண்டிருந்தன. ஆப்கானிஸ்தானில் நடந்த போர்க்குற்றங்களை ஒப்புக்கொள்ளவும், தங்கள் மனசாட்சியை வெளிப்படுத்தவும், உங்கள் கண்ணியம் பலருக்கு இல்லை.” என குறிப்பிட்டிருக்கிறார்.