ராஜ்கோட்: இலங்கை அணிக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் சேர்த்தது.
சூர்யகுமார் அதிரடி சதம்
இந்திய வீரர்கள் சுப்மான் கில் 46 ரன்களும் ராகுல் திரிபாதி 35 ரன்களும் சேர்த்து அணிக்கு உதவினர். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 112 ரன் சேர்த்தார். இதில் 9 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் அக்ஷர் பட்டேல் 21 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இந்திய அணி, இலங்கை அணிக்கு 229 ரன் இலக்கு நிர்ணயித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement