வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எந்தவொரு சூழ்நிலைகளையும் சமாளிக்க நம்மிடம் போதுமான பலம் இருப்பதாக இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: வடக்கு எல்லைகளில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், கணிக்க முடியாததாக இருக்கிறது. ஏழு பிரச்னைகளில் ஐந்து பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இது குறித்து ராணுவ மற்றும் ராஜ தந்திரங்கள் அடிப்படையில் பேச்சு நடத்தி வருகிறோம். எந்தவொரு சூழ்நிலைகளையும் சமாளிக்க நம்மிடம் போதுமான பலம் இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் நிலைமையைப் பொறுத்தவரை, கடந்த 2021, பிப்ரவரியில் ஏற்பட்ட போர்நிறுத்த புரிந்துணர்வு நன்றாக உள்ளது.

ஆனால் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எல்லை தாண்டிய ஆதரவு இருக்கிறது. வடகிழக்கில், பெரும்பாலான மாநிலங்களில் அமைதி திரும்பியுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளும், வளர்ச்சிக்கான முயற்சிகளும் நல்ல பலனைத் தந்துள்ளன. ராணுவ படை மறுசீரமைப்பு, மேம்படுத்துதல், நவீனமயமாக்கல், தொழில்நுட்ப உட்செலுத்துதல், மனித வள மேலாண்மை தத்துவம் ஆகியவற்றிலிருந்து தொடங்கி ஐந்து முக்கிய பகுதிகளில் இந்திய ராணுவத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement