பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் மற்றும் பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.
இந்த பொங்கல் சிறப்பு சந்தையில் கரும்பு மஞ்சள் இஞ்சி, மண்பானை வாழைக்கன்று உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வரும் ஜனவரி 17ஆம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.