
சிறப்பு காவலர் பணிக்கு முன்னாள் படை வீரர்கள் பதிவு செய்யலாம் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில், “கோவில் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலராக பணிபுரிய முன்னாள் படை வீரர்கள் பதிவு செய்யலாம்.

நல்ல உடல் ஆரோக்கியமும், விருப்பமும் உள்ள 62 வயதிற்கு உட்பட்ட முன்னாள் படை வீரர்கள் தங்களது பெயரினை திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 04175- 233047 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” என்று அதில் தெரிவித்துள்ளார்.