எம்ஜிஆர் பிறந்தநாள் விழா: எடப்பாடி பழனிசாமியின் பிளான் இதுதான்!

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் ஜனவரி 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதிமுகவினர் ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடம் சென்று மரியாதை செலுத்துவார்கள். அவரது சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்களும், அதிமுக தொண்டர்களும் முக்கிய வீதிகளில் எம்ஜிஆர் புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து அவர் நடித்த திரைப்படங்களின் பாடல்களை ஒலிக்க விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

அதிமுகவில் தற்போது உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில்
எடப்பாடி பழனிசாமி
, ஓ.பன்னீர் செல்வம்,
சசிகலா
ஆகியோர் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி, வரும் 17-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்வர்.

அதேபோல மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்தும், படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா ஏற்கெனவே தி.நகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.