சென்னை: மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்க சக்தியை மீறி செயல்படுவேன் என ஆளுநர் உரைக்கு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்ததும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி […]
