மகாஸ்கந்த ஹோமம்: வேண்டியதை 48 நாள்களில் நிறைவேற்றும் தோரணமலை முருகன்! நீங்களும் பங்கேற்கலாம்!

தோரணமலையில் தைப்பூசத்தை ஒட்டி 2023 பிப்ரவரி-5-ம் தேதி அதிகாலை 6 மணிக்கு தொடங்கி, மகா ஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பித்தால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் ஒரு மண்டல காலத்துக்குள் நிறைவேறும் என்பது நிச்சயம்.

ஆறு முகம் கொண்ட கந்தன் ‘ஆறறிவு படைத்த மனிதன் வணங்குதற்குரிய தெய்வம்’ என்கின்றன ஞானநூல்கள். தீராத நோய்களையும் கவலைகளையும் தீர்த்து வைப்பவன் முருகன். அதனால்தான் அவனை வைத்தியநாதன் என்றும் வாழ்த்துகின்றோம். பூவுலகில் உங்களுக்கு அவசியமான பொருட்களையும், பேறுகளையும் அளிப்பவன் முருகனே அதனால்தான் அவனை வரதராஜன் என்றும் போற்றுகிறோம்.

மகாஸ்கந்த ஹோமம்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் போற்றும். ஆனால் குமரன் குடி கொள்ளவென்றே உருவான மலை தோரணமலை. தென்பொதிகையில் சித்தர் பெருமக்களுக்கு அருள் செய்ய முருகப்பெருமான் விரும்பியபோது அவரது ஞான சக்தியே மலையாக அமர்ந்து காரணமலை எனும் தோரணமலையானதாம்.

தென்னகம் எங்கும் ஆறுமுகனுக்கு ஆலயங்கள் ஆயிரம் உண்டு. அதில் முருகனின் அருள் வாசமும் சித்தர்களின் அரூப வாசமும் உணரக்கூடிய தலம் தோரணமலை. இங்கு பணிபவர் துயர் களைகிறான் கந்தன். மலையேறி வருபவர்க்கு க்ஷண நேரத்தில் அருள்மழை பொழிகிறான் குமரன். சித்தர்களின் நித்திய பூஜையில் மகிழும் சிவபாலன். இங்கு வந்து தொழுபவர்களின் குறையெலாம் தீர்த்து நிறைவாழ்வு பெறச் செய்கிறான். கந்தனுக்கு ‘நான் மீளா அடிமையாகி வாழவேண்டும்’ என்று தேரையர் உள்ளிட்ட பல சித்தர்களும் ஞானியரும் உலவும் மலையிது.

தோரணமலை முருகன்

ஆரோக்கியமும் ஆன்மிகம் இணைந்து விளங்கும் திருத்தலம் தோரணமலை. சிவ -பார்வதி திருமணத்துக்கு தென்னகம் வந்த அகத்தியப் பெருமான் தோரணமலையின் அழகையும் வளத்தையும் கண்டு இங்கேயே தங்கிவிட்டார். அதுமட்டுமா, முருகப்பெருமானின் ஆலோசனையால் இங்கே ஒரு மாபெரும் மருத்துவச்சாலையை உருவாக்கி பல சீடர்களை உருவாக்கினார். அப்போது மலைமீது அகத்தியருக்குக் காட்சி தந்த குகை, இன்றும் முருகப்பெருமான் வீற்றிருக்கும் கருவறையாக உள்ளது. அகத்தியரின் மாணாக்கராக இங்கு வசித்துவந்த தேரையரின் ஜீவசமாதியும் இங்கேயே உள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.

பல காலம் சித்தர்களின் தாயகமாக விளங்கிய இந்த மலை, பிறகு அழிந்துவிட, ஆதிநாராயணன் என்ற அன்பரின் மூதாதையர் காலத்தில் இம்மலை குறித்து தெரிய வந்ததாம். அப்போது அவர்கள் கனவில் தோன்றிய முருகப்பெருமான், மலைமீது குகையில் இருப்பதாக வெளிப்படுத்த, அங்கு மீண்டும் வழிபாடுகளும் விழாக்களும் உருவாகின. பிறகு ஆதிநாராயணன் காலத்தில் இந்த மலையும் ஆலயமும் பிரசித்தி பெற ஆரம்பித்தது. மலைமீது அபூர்வமான குகை முருகப்பெருமான் ஆலயமும், மலையடிவாரத்தில் வேறொரு முருகப் பெருமான் ஆலயமும் உள்ளது. இங்கு ஸ்ரீவல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, ஸ்ரீ குருபகவான்,ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, சப்த கன்னிமார்கள், ஸ்ரீ கன்னிமாரம்மன், நாகர்கள் போன்ற சந்நிதிகளும் உள்ளன. சித்தர்கள் உலாவும் இந்த தலத்தில் தைப்பூச விழா வெகு சிறப்பானது என்கிறார்கள் ஊர் மக்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த ஆண்டு தைப்பூச நன்னாளான பிப்ரவரி-5ம் தேதி (2023) இங்கு தைப்பூச விழா நடைபெற உள்ளது. அதிகாலை 5 மணிக்கு தொடங்கி, மகா ஸ்கந்த ஹோமம், மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வீதி உலா, திருக்கல்யாணம், ஆன்மிக கொண்டாட்டங்கள் போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன. மேலும் இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள், இந்தியப்போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், உழவர் பெருமக்கள், சாதனை புரிந்த நல்லோர் என விசேஷமான அன்பர்களுக்கு பாராட்டும் மரியாதையும் செய்யப்பட உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் போன்றவையும் அன்னதானமும் நடைபெற உள்ளது.

மகா ஸ்கந்த ஹோமம்

இந்த தைப்பூச விழாவைக் கொண்டாட உங்கள் சக்தி விகடனும் தோரணமலை முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகா ஸ்கந்த ஹோமம் எனும் சிறப்பான ஹோமத்தை நடத்த உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தீராத நோய்கள் தீரும், தோஷ நீங்கும், குழந்தைப்பேறு உண்டாகும். ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு,பதவி உயர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். நிம்மதியான வாழ்வு கிட்டும். உறவுப் பிரச்னைகள் நீங்கும், சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள். செல்வவளம் பெருகவும், நிம்மதி கொண்ட நீண்ட வாழ்வு பெறவும் இந்தச் சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கிறார்கள். சுருங்கச் சொல்லின் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் நீங்கள் வேண்டிக்கொண்டது ஒரு மண்டல காலத்துக்குள் (48 நாள்கள்) நிறைவேறிவிடும் என்கிறார்கள் பெரியோர்கள். எனவே இந்த மகா ஸ்கந்த ஹோமத்தில் பங்கு கொள்வோம்! நலமும் வளமும் பெறுவோம்.

தோரணமலை

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம்+விபூதி+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.