பொங்கல் வாரத்தில் வெளியாகியுள்ள ‘வாரிசு’ படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறி இருக்கிறது, ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அஜித்தின் ‘துணிவு’ படத்தோடு மோதும் வகையில் விஜய்யின் ‘வாரிசு‘ படம் வெளியிடப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் ‘துணிவு’ படத்தை காட்டிலும் ‘வாரிசு’ படத்தின் முதல் நாள் கலெக்ஷன் குறைந்த அளவில் தான் இருந்தது குறிப்பிடத்தக்கது. பக்கா குடும்ப கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் பல திரை பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர். அந்த வகையில் நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்புவும் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது, ஆனால் படத்தில் குஷ்பூ இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
திரையரங்கில் வெளியான ‘வாரிசு’ படத்தின் ஒரு காட்சியில் கூட குஷ்பூ இடம்பெறவில்லை, குஷ்பூவின் காட்சிகள் ஏன் படத்தில் இடம்பெறவில்லை என இணையவாசிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்திய பேட்டியொன்றில் நடிகை குஷ்பூவிடம் ‘வாரிசு’ படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து கேட்கப்பட்டதற்கு பதிலளித்தவர், இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை விளக்க இயலாது என்று கூறியிருந்தார். கடந்த வருடத்தில் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து குஷ்பூ ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார், அந்த புகைப்படத்தில் குஷ்பூவுடன் ராஷ்மிகா மற்றும் விஜய் இடம்பெற்று இருந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. புகைப்படம் வைரலானதை தொடர்ந்து குஷ்பூ குறித்து நடிகர் விஜய் சமீபத்தில் நடைபெற்ற ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.
#Varisu | Vijay, Rashmika, Kushboo. pic.twitter.com/5YVycRwWtH
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 8, 2023
வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் குஷ்பூ குறித்த சில அழகான நினைவுகளை விஜய் பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகை குஷ்பூ இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறினார். அப்படி இருக்கையில் படத்தில் குஷ்பூ நடித்த காட்சிகளில் ஒன்று கூட இடம்பெறாமல் இருந்தது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியது. வாரிசு படத்தின் மொத்த ரன் டைம் அதிகமாகி இருந்தது படக்குழுவிற்கு பெரிய நெருக்கடியாக இருந்தது, படத்தின் மொத்த ரன் டைம் 170 நிமிடங்களாக இருந்தது. படத்தின் நீளத்தை குறைப்பதற்காக படக்குழு பல காட்சிகளை படத்திலிருந்து கடைசி நேரத்தில் நீக்கியது, இதில் குஷ்பூ நடித்த காட்சிகளும் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில், விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா க்ரிஷ், சம்யுக்தா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.